கருப்பக்கோன்தெரு வழியாக கறம்பக்குடிக்கு அரசு பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை: காட்டுவழி பாதையில் நடந்து செல்லும் அவலம்


கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே கருப்பக்கோன் தெரு வழியாக கறம்பக்குடி க்கு அரசு பேருந்துகளை இயக்க மாணவ மாணவிகள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட முள்ளங்குறிச்சி ஊராட்சியில் கருப்பக்கோன்தெரு, சாந்தம்பட்டி முள்ளங்குறிச்சி போன்ற பல்வேறு கிராமங்கள் இருந்து வருகிறது. இதில் கருப்பக்கோன் தெரு கிராமத்தில் இருந்து அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முள்ளங்குறிச்சிக்கு கல்வி கற்க சென்று வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு வசதியாக கருப்பக்கோன் தெரு கிராமம் வழியாக மறவம்பட்டி யில் இருந்து கருப்பக்கோன் தெரு, சாந்தம்பட்டி, முள்ளங்குறிச்சி யில் இருந்து திருமணஞ்சேரி வழியாக கறம்பக்குடி க்கு பேருந்துகளை இயக்ககோரி அனைத்து தரப்பினர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் பேருந்து இயக்கப்படாததால் அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தினம் தோறும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று கல்வி கற்க கூடிய சூழ்நிலை யில் உள்ளனர். எனவே கருப்பகோன்தெரு பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து பொதுமக்கள் செல்ல வசதியாக மறவம்பட்டி கருப்பக்கோன் தெரு முள்ளங்குறிச்சி வழியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கருப்பக்கோன் தெரு பகுதி பொது மக்கள் போக்குவரத்து துறை டெப்போ அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போதெல்லாம் உடனடியாக வருகை தந்து அந்த கிராமத்தில் ஆய்வு செய்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது வரை பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவிலை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

The post கருப்பக்கோன்தெரு வழியாக கறம்பக்குடிக்கு அரசு பேருந்து இயக்க மாணவர்கள் கோரிக்கை: காட்டுவழி பாதையில் நடந்து செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Related Stories: