திருவாடானை, டிச. 16: திருவாடானை வடக்குத் தெரு மற்றும் சன்னதித் தெரு வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை அடைத்து அதில் சிலர் கடைகளும் அமைத்து சாலையோர ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்சமயம் பருவமழை காரணமாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், இங்கு அடைபட்டுள்ள கழிவுநீர் கால்வாயின் வழியாக மழைநீர் ஓட வழியின்றி சாலையோரங்களில் தேங்கி நிற்கிறது.
இதனால், சுகாதாரமற்ற சூழல் நிலவி வருவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வடக்குத்தெரு மற்றும் சன்னதி தெருவில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள கழிவுநீர் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை கடைகாரர்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு சில நாட்களுக்குள் அகற்றிக் கொள்ளுமாறு திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர் இலக்கியா ராமு தெரிவித்துள்ளார்.
The post திருவாடானையில் சாலையோர ஆக்கிரமிப்பை உடனே அகற்றிக் கொள்ளுங்கள்: ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.