இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். பின்னர், விக்னேசுடன் இளம்பெண்ணுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஜாலியாக இருந்துள்ளனர். மேலும், அடிக்கடி பைக்கில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் ஊர் திரும்பினார். அப்போது தனது கள்ளக்காதலிக்கும், விக்னேசுக்கும் தொடர்பு இருந்த தகவல் தெரிந்தது. இதனால், இளம்பெண் மீது ஆத்திரமடைந்தார். கடந்த 10ம் தேதி இளம்பெண்ணின் வீட்டுக்கு குமரேசன் சென்றுள்ளார். அங்கு அவரை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் மறுத்துள்ளார்.அப்போது அவரிடம், `உனக்கும் விக்னேஷூக்கும் தொடர்பு இருப்பது தெரியும். இதனால்தான் என்னை நீ தவிர்க்கிறாய்’ எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இளம்பெண்ணை குமரேசன் சரமாரி தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவருடன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், குமரேசன் அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரம் கழித்து நள்ளிரவு விக்னேஷ் அங்கு வந்துள்ளார். அவரும் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால், தனக்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி அவர் மறுத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த விக்னேசும் இளம்பெண்ணை சரமாரி தாக்கிவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகிய இருவரும் எதுவும் நடக்காதது போல் தலைமறைவாகிவிட்டனர் என்ற தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து இருவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர், இருவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 கள்ளக்காதலர்கள் கைது: உல்லாசத்துக்கு மறுத்ததால் கொடூரம் appeared first on Dinakaran.