×

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் உயிர் தப்பிய அமைச்சர்

காரைக்கால்: காரைக்காலில் பிரதான வடிகால் ஆறுகளான அரசலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ஆற்றின் கரைகளை தொட்டு வெள்ளநீர் செல்கின்றது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அத்திப்படுகை, ஊழியபத்து கிராமத்தை இணைக்கும் சிறிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் நள்ளிரவில் அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அத்திபடுகை அருகே சிறிய பாலம் வழியாக நடந்தவாறு கடந்தார். அவர் கடந்து சென்ற சில நிமிடத்தில் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் திருமுருகன் நூலிழையில் உயிர் தப்பினார்.

The post வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் உயிர் தப்பிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Karaikal ,Athipadugai ,Adyalapattu ,Puducherry ,Thirumurugan ,Dinakaran ,
× RELATED கோட்டுச்சேரி பகுதியில் மழைக்கு பலத்த சேதம்