×

திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் நீதிபதி நேரடி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபம் ஏற்றும் மலையில் வவுசி நகர் பகுதியில் கடந்த 1ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு மண்ணுக்குள் புதைந்து 7 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நேரடி ஆய்வு நடத்தினார்.

அப்போது, மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வீடுகள் கட்டித் தர வேண்டும். மண் சரிவு தொடர்ந்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். ஆய்வின்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம பிரதீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் நீதிபதி நேரடி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Cyclone Penjal ,Vavusi Nagar ,Deepam Mandamum Hill ,Madras High Court ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் மண் சரிவு