×

முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

திருச்சி: அமராவதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அமராவதி அணையில் இருந்து 36,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை 6 மணி முதல் வினாடிக்கு 25,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் காவிரிக்கு நீர்வரத்தை பொறுத்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என்பதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்றில் ஓட்டிச்செல்ல வேண்டாம். சலவை தொழிலாளர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Mukhom ,Kolli ,Amaravathi ,Amaravathi dam ,Cauvery river ,Dinakaran ,
× RELATED அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள...