இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஆவடியை சேர்ந்த கராத்தே சாம்பியன் அருண் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கராத்தே விளையாட்டை விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க கோரி அரசுக்கு பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜூடோ போன்ற விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டை சேர்ப்பது குறித்து அரசுதான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
The post அரசு பணிக்கான தேர்வில் விளையாட்டு வீரர் ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டை சேர்ப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.