இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெருநகர வளர்ச்சி குழும துணைத் தலைவரால், உதவி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்ட செல்வநாயகத்தை சஸ்பெண்ட் செய்ய உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் இல்லை என்றும், வழக்கு நிலுவையில் இருந்த போது சஸ்பெண்ட் உத்தரவை உறுப்பினர் செயலர் ரத்து செய்தது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் செல்வநாயகம் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செல்வநாயகத்தின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக பணியில் சேர செல்வநாயகத்திற்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தனது தரப்பில் விளக்கத்தை அளிக்காமல், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என தெரிவித்து அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
The post வழக்கு நிலுவையில் இருக்கும்போது உத்தரவிடுவதா? சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.