சென்னை: தமிழகத்தில் 11 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் நிவேதிதா தென்சென்னை அசல்பத்திரப்பரிவு கண்காணிப்பாளராகவும், பெரியகுளம் மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் (நிர்வாகம்) அருள் செங்கல்பட்டு வழிகாட்டி சார்பதிவாளராகவும், விழுப்புரம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் இளங்கிளி விழுப்புரம் வழிகாட்டி சார்பதிவாளராகவும், தூத்துக்குடி வழிகாட்டி சார்பதிவாளர் மகாராஜன் திருநெல்வேலி சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும், நாமக்கல் வேலூர் சார்பதிவாளராக இருந்த பாலமுருகன் திருப்பத்தூர் ஆம்பூர் சார்பதிவாளராகவும், திண்டிவனம் சத்தியமங்கலம் சார்பதிவாளர் அன்பழகன் தென்சென்னை படப்பை சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல நாகப்பட்டினம் தகட்டூர் சார்பதிவாளர் மல்லிகேஸ்வரி திருவள்ளூர் ஆரணி சார்பதிவாளராகவும், திண்டிவனம் 1 எண் இணை சார்பதிவாளர் பானுமதி செங்கல்பட்டு சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும், விருதுநகர் கீழராஜகுலராமன் சார்பதிவாளர் செல்லப்பாண்டி பாளையங்கோட்டை கழுகுமலை சார்பதிவாளராகவும், பழனி வேடச்சந்தூர் சார்பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஈரோடு சென்னிமலை சார்பதிவாளராகவும், மயிலாடுதுறை மாவட்ட பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் (நிர்வாகம்) அன்பழகன் வடசென்னை சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post 11 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்: பதிவுத்துறை தலைவர் உத்தரவு appeared first on Dinakaran.