* மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ் தலைவர்): ஈவிகேஎஸ்.இளங்கோவன் காங்கிரஸ் மற்றும் பெரியாரின் கொள்கைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்டவர்.
* ராகுல் காந்தி (மக்களவை எதிர்க்கட்சி தலைவர்): ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொள்கை ரீதியான மற்றும் அச்சமற்ற கருத்துகளை தெரிவிக்கும் பண்புடைய அவர், காங்கிரஸ் கட்சியின் மதிப்பு மற்றும் பெரியாரின் கொள்கைகளுக்கு உறுதியான ஆதரவாளராக இருந்தார். தமிழகத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நமக்கு உத்வேகமாக இருக்கும்.
* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): ஈவிகேஎஸ்.இளங்கோவனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தன்மான தலைவர் என எல்லோரும் வாஞ்சையோடு அழைப்பார்கள். நேர்மையாகவும், மனதில் எந்தவித ஒளிவுமறைவின்றி பழகக்கூடியவர். எதிர்க்கட்சிகளை விமர்சித்தாலும் சரி, நண்பர்களிடம் பேசும்போதும் சரி… எந்தவித அச்சமும் இன்றி மனதில் நினைப்பதை சொல்லக்கூடியவர். அவரது இழப்பு கட்சிக்கு ஈடு செய்யமுடியாததாகும்.
* கனிமொழி எம்பி (திமுக துணை பொதுச்செயலாளர்): ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
* ராமதாஸ் (பாமக): தமிழ்நாட்டு அரசியலில் ஈவிகேஎஸ். இளங்கோவன் பயணிக்க வேண்டிய தொலைவும், படைக்க வேண்டிய சாதனைகளும் ஏராளமாக இருந்த நிலையில் அவரது மறைவை ஏற்க மனம் மறுக்கிறது.
* வைகோ (மதிமுக): காங்கிரஸ் இயக்கத்தின் சுயமரியாதை தலைவர் என்று சொல்லத்தக்க அளவுக்கு தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலிமையோடு எடுத்துச் செல்வதற்கு எவருக்கும் அஞ்சாமல் கருத்துகளை முன்வைத்த சிறப்பு அவருக்கு உண்டு.
மேலும், இந்திய கம்யூ னிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பாஜ தலைவர் அண்ணாமலை, அன்புமணி (பாமக), திருமாவளவன் (விசிக), ஜி.கே.வாசன் (தமாகா), பிரேமலதா (தேமுதிக), ஓபிஎஸ் (முன்னாள் முதல்வர்), தமிழிசை சவுந்தராஜன் டிடிவி.தினகரன், பொன்குமார், எம்.வி.சேகர், தி.க. தலைவர் கி.வீரமணி, திருநாவுக்கரசர், எர்ணாவூர் நாராயணன், ஏ.சி.சண்முகம், வி.ஜி.சந்தோசம், .தங்கபாலு, எம்பிக்கள் ஜோதி மணி, விஜய் வசந்த், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ராகுல், கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் appeared first on Dinakaran.