இந்த நிலையில், மற்ற அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியை நாளை (டிச. 15) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அமைச்சரவையில் முதல்வர் உள்பட அதிகபட்சமாக 43 பேர் வரை நியமிக்கப்படலாம். மேலும் மாநிலத்தின் 2வது தலைநகரான நாகபுரியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார தலைமையிலான தேசியவாத காங்கிரசை சேர்ந்த 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். நாகபுரியில் திங்கள்கிழமை (டிச. 16) முதல் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் ஒரு வார காலம் நடைபெறவுள்ளது.
The post பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசின் புதிய அமைச்சரவை நாளை விரிவாக்கம்: 30 பேர் அமைச்சர்களாக வாய்ப்பு appeared first on Dinakaran.