உடல் நலக்குறைவு காரணமாக பாஜ மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (97). இவர் பாஜவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த தலைவர்களில் ஒருவர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் ரத யாத்திரையை அத்வானிதான் தலைமையேற்று நடத்தினார். அதன்பிறகு தான் பாஜவின் வளர்ச்சி வேகமாக இருந்தது. அதுமட்டுமின்றி பாஜவின் நீண்டகால தேசிய தலைவராக பதவி வகித்தவர். இவர் 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய், பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவில் சீட் வழங்கப்படவில்லை.

வயது முதிர்வை காரணம் காட்டி பாஜ மேலிடம் சீட் வழங்கவில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். அவ்வப்போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்றும் அத்வானியின் அவரது உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர், டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post உடல் நலக்குறைவு காரணமாக பாஜ மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: