ஈரோடு : ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா 2023ம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவால் அத்தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.