×

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வால் டிச., 17, 18ல் தமிழகத்தில் மிக கனமழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்தமான், அதனை ஒட்டிய கடல்பகுதியில் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : southern Andaman Sea region ,Indian Meteorological Centre ,Delhi ,Tamil Nadu ,Andaman Sea ,Mannar Gulf region ,South Andaman Sea Region ,
× RELATED தெற்கு வங்கக் கடலில் குறைந்த...