- குகேஷ்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உலக செஸ் சாம்பியன்ஷிப்
- அரவிந்த் தனுஸ்ரீ
- கருப்பாக்கம், சென்னை
- தின மலர்
சென்னை: உலக செஸ் சாம்பியனாக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கடலுக்கு அடியில் செஸ் விளையாடி சிறுவர்கள் அசத்தியுள்ளனர். சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ. ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான இவர், இந்திய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தேசப்பற்றோடு தேசியக்கொடி ஏந்தி, ஆழ்கடலில் அதனை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷை பாராட்டும் வகையில், செஸ் போர்டு தயாரித்து அதனை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை கடலில் 18 மீட்டர் ஆழத்தில் கொண்டு சென்று, தாரகை, ஆராதனா, தீபிகா, நிஸ்விக், தீனா, லட்சுமணன், ராஜேஸ்வர பிரபு உள்ளிட்ட சிறுவர்களுடன் இணைந்து விளையாடினார்.
The post குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு: சிறுவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.