சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பணியில் காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 4186 வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.30 மணி வரை நடைபெறும். இத்தேர்வு 15 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்காக 22 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2 இடங்களில் இத்தேர்வு நடக்கிறது. மேலும் ஒரு அறைக்கு ஒருவர் வீதம் 22 தலைமை கண்காணிப்பாளர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு நடைபெறும்.
The post அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது appeared first on Dinakaran.