இந்நிலையில் 3வது டெஸ்ட் இன்று பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் பும்ரா தலைமையில் வென்ற நிலையில் 2வது டெஸ்ட்டில் ரோகித் தலைமையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடி ரோகித்துக்கு உள்ளது. கூடவே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற எஞ்சிய 3 டெஸ்ட்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.
எனவே இளம் வீரர்கள் சுப்மன், யாஷ்வி, நிதிஷ்குமார் ஆகியோருடன் அனுபவ வீரர்கள் ரோகித், கோஹ்லி, ராகுல், ரிஷப் போன்றவர்களும் விளையாடியே ஆக வேண்டும். பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு சிறப்பாகவே உள்ளது. அதனால் பேட்ஸ்மேன்களில் வரிசையில், வரவில் மாற்றம் இருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடி ஏதுமின்றி பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணி களம் காண இருக்கிறது.
முதல் டெஸ்ட்டில் தடுமாறினாலும், 2வது டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மார்னஸ் லபுஷேன் பொறுப்பான ஆட்டத்துக்கு திரும்பி விட்டனர். அது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கலாம். இந்த ஆட்டத்தில் வெல்லாவிட்டால் பல வீரர்களுக்கு மட்டுமல்ல, பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் இதுதான் கடைசி தொடராக அமையலாம். அதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 3வது டெஸ்ட் தொடங்குகிறது.
* காபா கணக்கு
இந்தியா 1947முதல் காபா அரங்கில் 7 டெஸ்ட்களில் ஆஸியுடன் மோதியுள்ளது. அவற்றில் 5ல் தோல்வியை சந்தித்துள்ளது. சுமார் 74 ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டு தான் இங்கு ஒரே ஒரு வெற்றியை இந்தியா பதிவு செய்தது. எஞ்சிய ஒரு ஆட்டம் டிராவில் முடிந்திருக்கிறது.
* உள்ளே வெளியே
நட்சத்திர ஆட்டக்காரர் ஆல்ரவுண்டர் அஷ்வினுக்கு முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்நது 2வது டெஸ்ட்டில் தான் உள்ளே வந்தார். முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் எடுத்தாலும் சிக்கனமாக பந்து வீசி இருந்தார். கூடவே பேட்ஸ்மேன்களை விட அதிக ரன், அதுவும் இரட்டை இலக்கத்தில் எடுத்திருந்தார். கூடவே 2வது டெஸ்ட் தோல்விக்கு அவர் எந்த விதத்திலும் காரணமில்லை. இருந்தும் 3வது டெஸ்ட்டில் அஷ்வினுக்கு பதில் மற்றொரு தமிழ்நாட்டு வீரர் வாஷிங்டனை களமிறக்க வேண்டும் என்று ‘வெட்டியாக’ இருக்கும் முன்னாள் வீரர்கள் சொல்லி வருகின்றனர். அதனால் அஷ்வின் மீண்டும் வெளியே உட்காரும் சூழல் உள்ளது.
அணி விவரம்:
* ஆஸ்திரேலியா ஆடும் அணி: பேட் கம்மின்ஸ்(கேப்டன்), அலேக் கேரி(விக்கெட் கீப்பர்கள்), டிராவிஸ் ஹெட், கவாஜா, ஸ்மித், லபுஷேன்(பேட்ஸ்பேன்கள்) மெக்ஸ்வீனி, மிட்செல் மார்ஷ்(ஆல்ரவுண்டர்கள்), நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட்(பந்து வீச்சாளர்கள்).
* இந்தியா: ரோகித் சர்மா(கேப்டன்), ராகுல், ரிஷப், ஜூரல்(விக்கெட் கீப்பர்கள்) அபிமன்யூ ஈஸ்வரன், கோஹ்லி, ஜெய்ஸ்வால், சுப்மன், சர்பராஸ் கான்(பேட்ஸ்மேன்கள்), நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அஷ்வின், ஜடேஜா(ஆல் ரவுண்டர்கள்), ஜஸ்பிரீத் பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ், பிரசித், ஹர்சித் ராணா(பந்து வீச்சாளர்கள்).
The post இன்று 3வது டெஸ்ட் தொடக்கம்: அடுத்த வெற்றிக்காக ஆஸி-இந்தியா மோதல் appeared first on Dinakaran.