இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை தயார் செய்து தங்கள் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களான நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு விற்பனை சங்கம், சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் (ரேஷன் கடைகள்) போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்கள் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் ‘இனிப்பு பொங்கல் தொகுப்பு’ என்ற பெயரில் ₹199க்கும், கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ₹499க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் ₹999க்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த பொருட்களின் தொகுப்பினை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மண்டல இணைபதிவாளர்கள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மேலாண் இயக்குனர்கள்,கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மேலாண்மை இயக்குனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று ெதரிவித்துள்ளார்.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விற்பனை: 3 பிரிவாக வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.