கணையத்தை காக்கும் கருஞ்சீரகம்!

நன்றி குங்குமம் தோழி

கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்தப் பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்தப் பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன.

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதய நோய், புற்று நோயை தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்குகிறது. கணையத்தை பாதுகாக்கும் பாதுகாவலன். சிறுநீரக கற்களை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சொரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து. மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும். உடலில் உள்ள நச்சுகள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற வழிவகுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். கருஞ்சீரகத்தில் விட்டமின்கள் ஏ,பி, பி 12, நியாசின், சி உள்ளிட்டவை உள்ளன. இது நினைவாற்றலை மேம்படுத்தும்.நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மூல நோயை விரட்டும், உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலுக்கு ஏற்றது. நினைவுத்திறனை அதிகரிக்கிறது. அல்சைமர் என்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமைகிறது.

தொகுப்பு: எம்.ஏ.நிவேதா, திருச்சி.

The post கணையத்தை காக்கும் கருஞ்சீரகம்! appeared first on Dinakaran.

Related Stories: