- அலஹாபாத் ஐகோர்ட்
- புது தில்லி
- அலகாபாத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி
- ஷகர் யாதவ்
- இராஜாங்க செயலாளர்
- இஸ்லாமியவாதிகள்
- குஜராத் மாநில அலகாபாத் உயர் நீதிமன்ற
- சேகர் யாதவ்
- அலஹாபாத் அய்கோர்ட்
- தின மலர்
புதுடெல்லி: இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ்வை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை மாநிலங்களவை செயலாளரிடம் 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று வழங்கினர். குஜராத் மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான சேகர் யாதவ் வலதுசாரி அமைப்பாளர் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதில், ‘இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளை சகிப்புத்தன்மை இல்லாமல் வளர்க்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள்’ என்பது உட்பட பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். இவரது இந்த பேச்சு பல்வேறு தரப்புகளையும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதுதொடர்பான விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றமும், ‘நீதிபதி சேகர் யாதவ் பேசிய விவகாரங்கள் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் உட்பட மொத்தம் 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை மாநிலங்களவை செயல ரிடம் இன்று வழங்கி உள்ளனர்.
அதில், ‘இஸ்லாமியர்களை இழிவாக பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ்வை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான வில்சன், முகமது அப்துல்லா, கிரிதரன், என்.ஆர்.இளங்கோ, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா என பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The post அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மாநிலங்களவை செயலாளரிடம் 55 எம்பிக்கள் கடிதம் appeared first on Dinakaran.