விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை ஆட்சியர் பழனி வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் ஓர் அங்கமாகவும், சம உரிமை பெற்று திகழ்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பல்வேறு சிறப்புதிட்டங்களை செயல் படுத்தியும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினை உயர்த்தி வழங்கி வருருகிறார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.96,0011 வீதம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,80,055 மதிப்பீட்டில் இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், தலா ரூ.25 ஆயிரம் வீதம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் வங்கிக்கடனுதவிகளும், தலா ரூ.6,480 வீதம் 15 பேருக்கு ரூ.1,02,600 மதிப்பீட்டில் ேமாட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தலா ரூ.79,900 வீதம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.79,000 மதிப்பீட்டில் மூளைமுடக்குவாத பயனாளிகளுக்கான சிறப்பு சக்கரை நாற்காலியும், 10 மாற்றுத்திறனாளிகளுக்குகு ரூ.1,12,000 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், தலா ரூ.1,06,000 மதிப்பீட்டில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,48,000 மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 21 லட்சத்து 655 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவி உபகரணங்களை நல்லமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை ேமம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் ₹20.21 கோடி மதிப்பில் 64 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், நலத்திட்டஉதவிகள் appeared first on Dinakaran.