- ஸ்வெர்பம்பாகம் ஏரி
- காஞ்சிபுரம்
- ஸ்ரீம்பரம்பாகம் ஏரி
- சென்னை
- கிரெம்பர்பாகம் எரி
- காஞ்சிபுரம் மாவட்டம்
- குன்னாதூர் மாவட்டம்
காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 4000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் எரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. எரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று (13:122024) காலை 06.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.29 அடியாகவும், கொள்ளளவு 3453 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6498 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) எரியிலிருந்து இன்று 13:122024 காலை 08.00 மணியளவில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 4000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து நீர்திறப்பு வினாடிக்கு 1000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே, எரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர் காவனுர் குன்றத்துர், திருமுடிவாக்கம் வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post முழு கொள்ளளவை எட்ட உள்ள செம்பரம்பாக்கம் ஏரி.. 4000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!! appeared first on Dinakaran.