பழைய கொத்தமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் ஓட்டுநர் பள்ளி மாணவர்களை இறக்கி விடுவதற்காக நிறுத்திய போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் பின்பகுதி கண்ணாடி முழுவதும் உடைந்து விழுந்ததோடு லாரியின் முன்பக்கமும் சேதம் அடைந்தது.
விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post பவானிசாகர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.