×

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை

தாம்பரம், டிச.13: என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் மீண்டும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜா (எ) சீசிங் ராஜா (49). இவர் மீது 6 கொலைகள், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி என 39க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. எதிரிகளை தீர்த்துக்கட்ட எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பார். இவர் மீது, ஆயுதத் தடை சட்டத்திலும் வழக்கு பதிவாகியிருந்தது. பல மாதங்களாக வெளி மாநிலத்தில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை, சமீபத்தில் போலீசார் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய, சோழிங்கநல்லூர் அருகே போலீசார் அழைத்து சென்றனர். அங்கு, பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீசாரை சுட முயன்றபோது, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியில் ஒரு ஏக்கர் 18 சென்ட் அரசு நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, வேறு நபர்களுக்கு விற்க சிலர் முயற்சித்துள்ளனர். அந்த நிலத்தை அபகரிக்க சீசிங் ராஜாவும், அவரின் கூட்டாளிகளும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி, சீசிங் ராஜா மனைவி, அவரின் கூட்டாளிகள், உறவினர்கள் வீடுகளில் வருவாய் துறையினர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், சொத்து ஆவணங்கள், நில வரைபடங்கள், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போலி ஆவணங்கள் தொடர்பாக சீசிங் ராஜா தொடர்புடைய வண்டலூர், கிளாம்பாக்கம், தாம்பரம், இரும்புலியூர் ஆகிய 4 இடங்களில், 4 ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர், வருவாய் துறையினர் உதவியுடன், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

The post என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை appeared first on Dinakaran.

Tags : Saising Raja ,Tambaram ,Cising Raja ,Raja ,Chaising Raja ,East Tambaram ,Ramakrishnapura ,
× RELATED தாம்பரம் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்