தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் 48 துறைகளில் 1820 பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் குரூப் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடந்தது.
இத்தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டும் எழுதினர். இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி கடந்த நவம்பர் 9ம் தேதி மேலும் உயர்த்தியது. அதாவது, 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2540 ஆக உயர்ந்தது. காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்த குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி நேற்று மாலை தனது இணையதளத்தில் www.tnpsc.gov.in, tnpscresults.tn.go.inல் வெளியிட்டது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுகளின் முடிவுகள் 2022ம் ஆண்டை ஒப்பிடுகையில் விரைவாக வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 2 முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 2540 பதவிகளுக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது appeared first on Dinakaran.