பூந்தமல்லி: மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுரவாயல் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மதுரவாயல் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் அதிக அளவில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
அவர்கள் தங்களிடம் இருந்த போதை மாத்திரைகளை கைமாற்றிவிட வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் போதை மாத்திரை வாங்க வந்தவர்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில், போதை மாத்திரை கடத்தல் கும்பலில் முக்கிய நபர்களான பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (26), லோகேஷ் (22) உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 2100 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
The post மதுரவாயல் மேம்பாலம் அருகே ரூ.1.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்: 7 பேர் கைது appeared first on Dinakaran.