- கார்த்திப்பாறை
- பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
- ஆலந்தூர்
- சென்னை
- Adambakkam
- Nanganallur
- மடிப்பாக்கம்
- புருதிவாக்கம்
ஆலந்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த கன மழை காரணமாக ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும், பழவந்தாங்கல் சுரங்கப்பாதை நீரில் மூழ்கியதால் அவ்வழியே போக்குவரத்து பாதித்தது.
இதனால், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் இருந்து தாம்பரம் மற்றும் சென்னைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். இதேபோல் கிண்டியில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் பாதையில் உள்ள கத்திபாரா சுரங்கப்பாதை மூழ்கியதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலந்தூர் ஆபிரகாம் நகர், மாதவபுரம் மடுவின்கரை, புழுதிவாக்கம் ராம் நகர், கலைவாணி தெரு, மடிப்பாக்கம் லட்சுமி நகர் 4வது தெருவில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மீனம்பாக்கம் சிமென்ட் சாலை, கத்திப்பாரா சாலை, ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை, ஆதம்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலை போன்றவற்றில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post கத்திப்பாரா, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை மூழ்கியது appeared first on Dinakaran.