இது கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் நேற்று வரையில் ரூ.1891 கோடி வருவாய் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த பதிவுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து, இந்த நிதி ஆண்டின் மீதமுள்ள மாதங்களிலும் வருவாய் இலக்கினை எய்திட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் சதவீதம் கூடியிருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்து, அனைத்து சார் பதிவாளர்களும் மேற்கண்ட பணியினை சிறப்பாக செய்வதை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
The post 2024-25ம் நிதி ஆண்டில் பதிவுத்துறையில் ரூ.1891 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.