- தாம்பரம்-திருவண்ணாமலை
- தீபத் திருவிழா
- சென்னை
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
- பூர்ணமி கிரிவலம்
- மகா தீபம்
- அண்ணாமலையார் தீபம் மலை
- திருவண்ணாமலை...
சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 13ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, டிசம்பர் 15ம் தேதி பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் தீப மலையில் மகாதீபம் ஏற்றுவதை காண உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக மதியம் 2.45க்கு திருவண்ணாமலை சென்றடையும் மறுமார்க்கமாக இரவு 10.25க்கு திருவண்ணாமலையில் புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 2.15 மணியளவில் தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தீப திருவிழாவை முன்னிட்டு தாம்பரம்-திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்: 3 நாட்கள் இயக்கம் appeared first on Dinakaran.