பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.அப்போது பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை கடந்த 4 ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு நீடித்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தனர்.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் நேற்று பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். நேரம் செல்ல செல்ல கோவிலினை வெள்ளம் சூழ்ந்தது. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்மழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னிமார் சிலைகள் மூழ்கி வருவதால் கோவில் நிர்வாகிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

The post பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: