×

பெண்கள், பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.1.20லட்சமாக உயர்வு

சென்னை: பெண்கள், பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. திருமண நிதியுதவி திட்டத்தில் நிதியுதவி பெறும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 12,000-லிருந்து ரூ.24,000 ஆக உயர்ந்துள்ளது. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தில் கிராமப்புறங்களில் வருமான உச்சவரம்பு ரூ.24,000-லிருந்து ரூ.40,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ரூ.24,000-லிருந்து ரூ.60,000 ஆகவும் உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.72,000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post பெண்கள், பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.1.20லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Sathyavani ,Muthu Ammaiyar ,
× RELATED பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி எண்ணூர்...