கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்வராயன்மலைத் தொடர்ச்சியில் பெய்து வரும் மழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோமுகி அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் உபரி நீராக ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்படுகிறது.