சாத்தனூர் அணையில் 5,000 கனஅடி நீர் வெளியேற்றம்

​​​​திரு​வண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.50 அடியை எட்டி உள்ளது. நீர்வரத்து அதிகரித்தால் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும். சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post சாத்தனூர் அணையில் 5,000 கனஅடி நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: