18 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், டிச.12: திருப்பூரில் 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இந்த, ஆர்ப்பாட்டத்தில் வாடகை கடை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீத கூடுதல் சொத்து வரிவதிப்பை திரும்ப பெற வேண்டும், வணிக உரிம கட்டணம் உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை அபகரிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இதில், செயலாளர் லாலா.கணேசன், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொது செயலாளர் செல்வன், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முன்னதாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை சந்தித்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தினர்.

The post 18 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: