மதுரை, டிச.12: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று அண்ணா நகரில் நடந்தது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மாநில தலைவர் ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். பேரமைப்பின் மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மாநில கூடுதல் செயலாளர் பெரிஸ் மகேந்திரவேல், மாநில துணைத்தலைவர்கள் பாண்டியன், ேடனியல் தங்கராஜ் மாநில இணைச்செயலாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாவட்ட செயலாளர் அழகேசன் வரவேற்றார். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவிகிதம் கூடுதல் சொத்து வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும். வணிக உரிமை கட்டணம் உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் லட்சுமி காந்தன் நன்றி கூறினார்.
The post ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற கோரி வணிகர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.