×

டிவி நடிகையின் 14 வயது மகன் சடலமாக மீட்பு: நண்பர்கள் 2 பேர் கைது

பெரெய்லி: மும்பையில் தொலைக்காட்சி நடிகை சப்னா சிங்கின் மகன் சாகர் கங்வார்(14) உத்தரப்பிரதேசத்தின் பெரெய்லியில் ஆனந்த் விகார் காலனியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சென்ற சாகர் திடீரென காணாமல் சென்றார். இந்நிலையில் ஞாயிற்று கிழமை காலை அடலாகியா கிராமம் அருகே சாகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த நடிகை சப்னா சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதார்.

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சோதனையில் இரண்டு பேர் சாகரின் உடலை இழுத்து சென்று போடுவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவில் இருந்த இரண்டு பேரையும் அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் கண்டனர். சாகரின் நண்பரான இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் உயிரிழப்புக்கான குறிப்பிட்ட காரணம் கூறப்படவில்லை. போதைப்பொருள் அல்லது விஷம் அருந்தியதால் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

The post டிவி நடிகையின் 14 வயது மகன் சடலமாக மீட்பு: நண்பர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bareilly ,Sapna Singh ,Sagar Gangwar ,Anand Vihar Colony ,Bareilly, Uttar Pradesh ,Sagar ,
× RELATED ரூ.62 கோடி மோசடி ராணுவ வீரர் கைது