ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்ைப கண்டித்து விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

விழுப்புரம், டிச. 12: ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை விதித்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், வீடு, கடைகளுக்கு ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரியை உயர்த்தி வருவதை நிறுத்த மாநில அரசை வலியுறுத்தியும், வரி உயர்வுகளை உடனே திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பிரேம்நாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்தனர். வணிகர்களின் போராட்டம் காரணமாக விழுப்புரத்தில் உள்ள காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், பர்னிச்சர் கடைகள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். வணிகர்களின் கடையடைப்பு போராட்டம் காரணமாக விழுப்புரம் நகரில் பரபரப்பாக காணப்படும் எம்ஜிரோடு, பாகர்ஷா வீதி, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பிற்பகல் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு வழக்கம்போல் கடைகள், மால்கள் திறக்கப்பட்டு இயங்கின.

The post ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்ைப கண்டித்து விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: