தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காவலாளி பலி

தர்மபுரி, டிச.12: காரிமங்கலம் அடுத்த நல்லகுட்லஅள்ளியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(65). இவர் அந்த பகுதியில் மாந்தோப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இதனால் அங்கேயே தங்கிக்கொள்வது வழக்கம். இவரது மனைவி அவ்வப்போது அவரை வந்து பார்த்து செல்வார். நேற்று முன்தினம், ஈஸ்வரனின் மனைவி மாதேஸ்வரி மாந்தோப்பிற்கு வந்தார். அப்போது, அங்கு ஈஸ்வரன் இல்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியபோது, தண்ணீர் தொட்டியில் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த காரிமங்கலம் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், தண்ணீர் தொட்டியில் அவர் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. அவரது சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காவலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: