சூளகிரி, டிச.12: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சூளகிரி வட்டார தேர்தல், சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தலுக்கு வட்டார தேர்தல் கண்காணிப்பாளர் சேகர், தேர்தல் ஆணையாளர் ராவணன், தேர்தல் உதவி ஆணையாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை தேர்தல் நடைபெற்று. இந்த தேர்தலில், வட்டார தலைவராக ரமேஷ் பாபு, வட்டார செயலாளர் ஜெபதிலகர், வட்டார பொருளாளர் ராஜேந்திரன், மகளிரணி செயலாளர் மலர் ஏசுவடியாள், வட்டார துணை தலைவர்கள் அருள் மரியநாதன், சாந்தி, வட்டார துணை செயலாளர்கள் ஏஞ்சலின் ராஜசேகரி, விவேகானந்த தாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹரிகிருஷ்ணன், வின்சென்ட் அருள்ராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
The post ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.