×

இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி, டிச.12: கிருஷ்ணகிரி அடுத்த லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சாபுலால். இவரது மனைவி ரிகானா (44). இவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. பணத்தை கொடுத்தவர்கள் அடிக்கடி, அவரிடம் கேட்டு வந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த ரிகானா, கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சாபுலால் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Chabulal ,Londonpet ,Rigana ,
× RELATED அரசு ஊழியர்களின் சொத்து, கடன் குறித்த...