- திருவண்ணாமலை மாவட்டம்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை கலெக்டர்
- பாஸ்கரா பாண்டியன்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபா விழா
- திருவண்ணாமலை
திருவண்ணாமலை, டிச.12: திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை (13ம் தேதி) நடைபெறுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் நாளை (13ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) அன்று இயங்கும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு நாளை இயங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.