புதுடெல்லி: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைப்பிடித்துள்ளனர். சிரியாவின் புதிய இடைக்கால பிரதமராக முகம்மது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். டமாஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரங்களில் இயங்கிவரும் இந்திய துணை தூதரகத்தின் முயற்சியின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்து வரப்பட்டனர்.
The post சிரியாவில் சிக்கித்தவித்த 75 இந்தியர்கள் மீட்பு appeared first on Dinakaran.