×

ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு

திருவனந்தபுரம்: ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் பெற்றோர் தங்கியிருந்த வீடு கொல்லம் அருகே உள்ள இரவிபுரம் பகுதியில் உள்ளது. தற்போது இந்த வீட்டில் அதிகமாக யாரும் தங்குவது கிடையாது. இதனால் இந்த வீடு பெரும்பாலும் பூட்டப்பட்டிருக்கும். சுரேஷ் கோபி அல்லது அவரது உறவினர்கள் எப்போதாவது இங்கு சென்று தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் கோபியின் தம்பி மற்றும் குடும்பத்தினர் இந்த வீட்டுக்கு சென்றனர்.

அப்போது 2 பேர் வீட்டின் சுவரை தாண்டிக் குதித்து வெளியே ஓடியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப் மற்றும் சில பொருட்களை காணவில்லை. இது குறித்து இரவிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து முகம்மது ஷிமாஸ் மற்றும் அருண் ஆகியோரை கைது செய்தனர்.

The post ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Suresh Kobe ,Thiruvananthapuram ,Union Associate Minister ,Ravipuram ,Kollam ,Suresh Kobi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் வீட்டில் திருட்டு: 2 பேரிடம் விசாரணை