குமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா நாளை ெகாண்டாட்டம் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது

நாகர்கோவில், டிச.12: திருக்கார்த்திகை தீப திருவிழா நாளை (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு நடத்துவர். மேலும் நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வேளிமலை குமாரகோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலையில் சொக்கப்பனை ெகாளுத்தப்படுகிறது. கன்னியாகுமரி அருகேயுள்ள மருந்துவாழ்மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருக்கார்த்திகை தினத்திற்கு ஒரு நாளே உள்ள நிலையில் பொதுமக்கள் திருக்கார்த்திகை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகள் ஏற்றப்படும் என்பதால் நாகர்கோவில் பகுதி மார்க்கெட்களில் தீப சட்டிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. களிமண், சிலிக்கான் வகை விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாகர்கோவில் வடசேரி பகுதியில் இதற்காக புதிது புதிதாக கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன. ஒரு விளக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் அகல் விளக்குகள் பொதுமக்களை கவரும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் கொழுக்கட்டை செய்வதற்கான திரளி இலை, பனை ஓலை போன்றவற்றின் விற்பனையும் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டு திரளி இலை ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

The post குமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழா நாளை ெகாண்டாட்டம் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: