பழைய துறைமுக வளாகத்தில் புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது, அங்கு வேண்டுமானால் நடத்திக்கொள்ளலாம். அதற்கான ஜிஎஸ்டியுடன் கூடிய கட்டண விபரங்களை அமைச்சர் தெரிவித்தார். கடற்கரையோரம் உள்ள சீகல்ஸ் ஓட்டல் (அரசு கட்டிடம்) பார்க்க நன்றாக இருக்கிறது. அதனை விலைக்கு கொடுக்கலாமே என இயக்குனர் விக்னேஷ் சிவன் கேட்க, ஆடிப்போன அமைச்சர், அது அரசின் கட்டிடம், அங்கு சுற்றுலாத்துறை ஊழியர்கள் 300 பேர் வேலை செய்கிறார்கள். தெரிந்துதான் கேட்கிறீர்களா? என்னை காலி செய்துவிடுவீர்கள் போல என அதிர்ச்சியில் அமைச்சர் கேட்க, அதெல்லாம் இல்லை என சமாளித்த ஷூட்டிங் சைட் மேனஜர் குமரன், குத்தகைக்குதான் கேட்டோம் எனக்கூறி சமாளித்துள்ளார். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை, நிகழ்ச்சி நடத்துவதற்கு வேறு இடம் காட்டுகிறோம், போய் பாருங்கள் எனக்கூறிவிட்டு அமைச்சர் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பழைய துறைமுக வளாகத்தில் உள்ள அரங்கத்தை பார்வையிட்டனர்.
The post இசை நிகழ்ச்சி நடத்த அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்: ஆடிப்போன புதுச்சேரி அமைச்சர் appeared first on Dinakaran.