அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்தது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை ெகாண்டு இருந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று அது தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி்ல ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.
அதன் தொடர்ச்சியாக 13ம் தேதியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதேநிலை 17ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். வெப்பநிலை 90 டிகிரி மற்றும் அதற்கு கீழும் இருக்க வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.