நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவன் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு மத்திய தணிக்கை அமைப்புக்கு அதுகுறித்த விவரங்களை வழங்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. இதற்காக, தமிழக அரசின் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பாஜ தொடர உள்ளது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளோம். பாஜ சார்பாக நானும், ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும், ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை இது தொடர்பாக இன்று சந்திக்க உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்ய ஒன்றிய அரசுக்கு தமிழக பாஜ கடிதம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.