திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகா தீபத்தை ஒட்டி டிசம்பர் .12 முதல் 15 வரை பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையம் தொடர்பான சந்தேகங்களுக்கு 93636 22330 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தீபத் திருவிழாவை ஒட்டி 116 கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக 93636 22330 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கார் பார்க்கிங் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் திருவண்ணாமலை போலீஸ் தெரிவித்துள்ளது.
The post திருவண்ணாமலை தீபத் திருவிழாவை ஒட்டி 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு..!! appeared first on Dinakaran.