டெல்லி: பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவரது படைப்புகளின் முழு தொகுப்பை இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்த தொகுப்பில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் உள்ளன. முதன்முறையாக பாரதியாரின் இந்த தொகுதிகள் நூல்களாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறுவனம் இதை வெளிட்டது. இந்த நிறுவனம் பாரதியாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பேசிய பிரதமர் மோடி:
தமிழ்ப்பெரும் கவிஞரும் சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாரதியாருக்கு எனது இதய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். பாரதியின் நூல் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். வளமான இந்தியாவுக்கான பாரதியின் தொலைநோக்கு பார்வை பல தலைமுறைகளை கடந்து ஊக்கமளிக்க்கும் என அவர் கூறினார்.
The post பாரதியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் அவரது படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.