ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2025 ஜன.13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.25ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.